×

ஒன்றிய அரசுக்கு எதிராக 2வது நாளாக தொழிற்சங்கங்கள் போராட்டம்: 80 சதவீத பஸ்கள் இயங்கின

செங்கல்பட்டு: பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது, விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்ததுல், தொழிலாளர் சட்டவிரோத தொகுப்புகளை கைவிடல், மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெறுதல் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் நேற்று 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தமிழகத்தில், இந்த போராட்டத்துக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்தன. இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்தில் 2வது நாளாக நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். செங்கல்பட்டு பணிமனையில் இருந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தாம்பரம், மதுராந்தகம், உத்திரமேரூர் உள்பட பல இடங்களுக்கு 112 பஸ்கள் வழக்கமாக இயக்கப்படும். வேலை நிறுத்தம் காரணமாக   70 சதவீதம் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள், அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வழக்கம் போல பணிக்கு சென்றனர். ஆட்டோக்கள், தனியார் பஸ்களில் வழக்கம்போல பயணிகள் பயணம் செய்தனர். ரயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் இருந்தது. மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நேற்று 2வது நாளாக நடந்த வேலை நிறுத்த போராட்டத்தின்போது போக்குவரத்து வழக்கம்போல் இயங்கும். தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டம் மட்டும் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து நேற்று காலை முதலே 80 சதவீத பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. கல்லூரி, தொழிற்சாலை ஊழியர்கள் வழக்கம்போல் தங்கள் பணிக்கு செல்கின்றனர். ஆட்டோக்களும் வழக்கம் போல் ஓடியது. ஆனால், பஸ்களில், குறைந்தளவு மக்கள் பயணித்தனர். இதற்கிடையில், காஞ்சிபுரம் போக்குவரத்து பணிமனை, காஞ்சிபுரம் ரயில்வே ரயில்வே ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம், ஓரிக்கை ஜரிகை தொழிற்சாலை உள்பட 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தொமுச மாநில செயலாளர் பொன்ராம், நிர்வாகிகள் ரவி , ஏ.கே.இளங்கோவன், சுந்தரவரதன், சுதாகரன், சிஐடியு நந்தகோபால், மதுசூதனன், ஸ்ரீதர், ஜரிகை சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post ஒன்றிய அரசுக்கு எதிராக 2வது நாளாக தொழிற்சங்கங்கள் போராட்டம்: 80 சதவீத பஸ்கள் இயங்கின appeared first on Dinakaran.

Tags : Union government ,Chengalpattu ,PSUs ,
× RELATED ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின்...